பொன்னேரி- மீஞ்சூர் சாலை வழியே பகலில் கனரக வாகனங்கள் செல்ல கூடாது, டி.எஸ்.பி அதிரடி அறிவிப்பு, மக்கள் மகிழ்ச்சி…
1 min read
- பொன்னேரி – மீஞ்சூர் சாலையின் வழியாக, எண்ணூர் துறைமுகத்தில் இருந்து, கரி மற்றும் கண்டெய்னர்களை ஏற்றி கொண்டு தினமும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகள் சென்று வருவது, வழக்கம்.

அந்த லாரிகள் பெரும்பாலும்
கும்முடிபூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள தனியார் கம்பெனிகளுக்கும், அதே போல் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு செல்ல கூடிய கரி மற்றும் கண்டெய்னர் லாரிகள் இரவு, பகல் என்று சிறிது நேரங்கூட இடைவெளி இல்லாமல் எந்த நேரத்திலும் சென்று வந்து கொண்டு இருந்தன. அதை பொதுமக்கள் எதிர்த்து பல முறை ஆர்ப்பாட்டங்கள் கூட நடத்தியுள்ளனர். அந்த சமயங்களில் சில நாட்கள் கனரக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும். அதில் இருந்து சில தினங்கள் பள்ளி நேரங்கள் மட்டும் நிறுத்தப்படும், பின்னர் இன்னும் சில தினங்கள் கழித்து மீண்டும் பழைய முறையிலேயே அந்த வாகனங்கள் அதிக பாரங்கள் ஏற்றி கொண்டு வழக்கம் போல் சென்று கொண்டிருக்கும்.

இந்நிலையில், சில தினங்களாக தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு கொண்டு இருந்ததால், பொன்னேரி டி.எஸ்.பி கல்பனா தத் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் அதில்,
” பொன்னேரி – மீஞ்சூர் போன்ற ஊர்களில் மக்கள் நெருக்கமாக அதிகம் நடமாட கூடிய கடை வீதிகளின் வழியாக இனி, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கண்டிப்பாக கனரக வாகனங்கள் செல்ல கூடாது ” என உத்தரவிட்டார்.

மேலும், இந்த உத்தரவை லாரி உரிமையாளர்கள் முழுமையாக கடைபிடிக்க செய்ய வேண்டும் என்பதற்காக, பொன்னேரி சரக துணை கண்காணிப்பாளர் அலுவலத்தில், லாரி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி அதில் கலந்து கொண்டவர்களிடம், அவர் பேசுகையில்,”பொன்னேரி – மீஞ்சூர் பகுதிகளில் மக்கள் நெருக்கமான சாலையின் வழியாக இனி கனரக வாகனங்கள் இயக்க கூடாது எனவும், கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு செல்ல கூடிய அந்த வாகனங்கள் இனி மீஞ்சூரில் இருந்து வண்டலூர் சாலையின் வழியாக சோழவரம் சுங்கசாவடி வழியே, கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தான் சென்றுவர வேண்டும் ” என உறுதியாக சொன்னார். ஆலோசனை கூட்டத்தில் பொன்னேரி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், மீஞ்சூர் சப் இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனால், பல ஆண்டுகளாக பொன்னேரி – மீஞ்சூர் இடையேயான திருவொற்றியூர் – பொன்னேரி – பஞ்செட்டி சாலையில் நடந்த விபத்துகளால் உயிர் இழந்த, மற்றும் கை,கால் இழந்த பல குடும்பத்தினர், டி.எஸ்.பி கல்பனா தத் அவர்களை, மனதார பாராட்டி மகிழ்கின்றனர்.
செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777