Mon. Oct 19th, 2020

ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகளை தமிழக காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்…

1 min read

தமிழக-ஆந்திர எல்லையான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், ஆரம்பாக்கம் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வேகமாக ஒரு கார் வந்தது. அதை பார்த்து சந்தேகம் அடைந்த போலிசார் அந்த காரை மடக்கி ஒட்டுனரிடம் விசாரனை நடத்தியுள்ளனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலிசார் உடனே அவர் ஓட்டி வந்த காரை பரிசோதனை செய்தனர். அப்போது காவல் துறையினர் காரின் பின் பக்கத்தை திறந்து பார்த்த போது, அங்கு பல லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் செம்மரக்கட்டைகளை கடத்தயவரை கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் என மதிப்பிடபட்டுள்ளது, நெல்லூரை சேர்ந்த ராவண் பாப்பையா என்பவர் சென்னைக்கு கடத்தி சென்ற போது பறிமுதல் செய்துள்ளதாகவும், இந்த செம்மர கட்டைகள் யாருக்காக கடத்தப்படுகிறது, இதில் முக்கிய குற்றவாளிகள் யார்? என்பது குறித்து, விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *