Fri. Oct 23rd, 2020

கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில், உலக மன ஆரோக்கிய நாள் விழிப்புணர்வு பிரச்சாரம்…

1 min read

கும்மிடிப்பூண்டியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் திருவள்ளூர் துணை இயக்குனர் ஜவர்லால் அறிவுறுத்தலின்படி, கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில், உலக மன ஆரோக்கிய நாள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் சுண்ணாம்புகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மன ஆரோக்கிய நாள் இதனைப் பற்றி விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து மன அழுத்தம் பதட்டம் உள்ளவர்கள் முதல் கட்டத்திலேயே அதாவது ஆரம்ப காலத்திலேயே மருத்துவரை அணுக வேண்டும், எனவும், மன அழுத்தம் உள்ளவர்கள் அவர்களுக்கு பிடித்த நெருக்கமான நபர் மூலமாக நல்ல ஆலோசனைகளையும் அதற்கான வழிகளையும் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

இதற்கான சிகிச்சை அதாவது வழிமுறைகளை பின்பற்றி மன அழுத்தம் பதட்டம், பசியின்மை, தேவையற்ற பயம், ஒழுங்கற்ற தன்மை தூக்கமின்மை, அளவுக்கு அதிகமான சந்தோஷம், ஓய்வில்லாமல் வேலை செய்தல், இவ்வாறான வேறுபாடுகளை உணர்வீர்கள். ஆனால் அது ஆரோக்கியத்தை கெடுக்கும் என வட்டார மருத்துவ அலுவலர் மன ஆரோக்கிய நாளை மருத்துவமனையில் மற்றும் பணியாளர்களுக்கு இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
உடன் சுகாதார செவிலியர்கள் வசந்தி துர்கா நிஷா அக்ஸதவேனு ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – யாகோப்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *