திருவள்ளூர் மாவட்டம், ஆண்டார்குப்பத்தில் சிவலிங்க சிவாலயம் புணரமைக்க சித்தர்கள் வருகை…
1 min read
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பெரவள்ளூர் கிராமத்தில், 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் எனும் பெயரில் சிவபெருமான் லிங்க வடிவில் அருள்பாலித்து வந்தார்.

கடந்த 100 ஆண்டுகளாக வெட்டவெளியில் இருந்து வந்த சிவலிங்கத்திற்கு நம்மீஸ்வர் என அன்பாக பெயரிட்டு வணங்கி வழிபாடு செய்து வந்த கிராம பொதுமக்கள், சிறிய ஆலயம் ஒன்றை அமைக்கும் பணியினை மேற்கொண்ட நிலையில் பணிகள் நிறைவடையாமல் இருந்தது. கடந்த 15 ஆண்டுகளாக ஆலய கட்டுமான பணியினை மேற்கொண்டவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் வந்துக் கொண்டே இருந்தது.

இதனால் சென்னை அயனாவரம் லோகேஸ்வரன் எனப்படும்
அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே உள்ள விளாங்காடு என்ற இடையாற்றுப்பாக்கம் கிராமத்தில் பிறந்து சித்தராக உருவெடுத்த குழந்தை சித்தர், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் அருகிலுள்ள சிவபுரத்தில் வாழ்ந்து சித்தரான சிவலோக தியான லிங்கேஸ்வர சித்தர் என்ற பெரிய சித்தர் ஆகியோர் பெரவள்ளூர் வருகை தந்து ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தனர். கிராம பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழிபாடானது அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777