பெரியபாளையத்தில் பைக்குகளை திருடி விற்பனை செய்த, 3 வாலிபர்கள் கைது, 26 பைக்குகள் பறிமுதல்…
1 min read
பெரியபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள தண்டலம், ஆரணி, வெங்கல் என பல இடங்களில் கடந்த ஒரு வருடமாக பைக்குகள் திடீர் திடீரென திருடு போனது. இது குறித்து பெரியபாளையம் , வெங்கல் ஆகிய காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது,

இது குறித்த தகவல் அறிந்த திருவள்ளூர் எஸ்பி. அரவிந்தன் உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி மேற்பார்வையில் பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் சப் – இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமராஜ் உள்ளிட்ட 10 கும் மேற்பட்ட குற்றபிரிவு போலிசார் தனி படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அப்போது பெரியபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் பைக் திருடும் போது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதையறிந்த போலிசார் அந்த வாலிபர்களை கண்டுபிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரனையில் அவர்கள் பல இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 26 மோட்டர் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், போலிசார் இந்த தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட, பெரியபாளையத்தை சேர்ந்த நாகராஜ் ( வயது 23) , ஆவாஜி பேட்டையை சேர்ந்த குமார் ( வயது 29) , செங்கரையை சேர்ந்த பூவரசன் ( வயது 24) என்பது தெரியவந்தது. இவர்கள் பைக்குகளை திருடி ஆந்திர பகுதிகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இது குறித்து, போலிசார் மேலும் விசாரனை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777