சென்னையின் குடிநீர் தேவைக்காக கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன்கோட்டையில் கட்டப்பட்டு வரும் நீர்த்தேக்கத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்…
1 min read
கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன் கோட்டையில் 380 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர்தேக்க திட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நீர்தேக்கத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் மற்றும் பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

கண்ணன்கோட்டையில் உள்ள ஈசா ராஜன் ஏரியை தேர்வாய் ஏரியோடு இணைத்து கண்ணண் கோட்டையில் நீர்தேக்கம் அமைத்து இதன் மூலம் 1 டிஎம்சி தண்ணீரை தேக்கி, சென்னை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் வகையில் 2010ஆம் ஆண்டு திட்டமிட்டு, 2013 ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் துவக்கபட்ட இந்த திட்டத்திற்க்கு, கண்ணன்கோட்டையில் 850 ஏக்கர் பட்டா நிலம் உள்ளிட்ட 1500 ஏக்கர் விவசாய நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது.

கண்ணன்கோட்டை பகுதி மக்களின் பல்வேறு எதிர்ப்புகள் போராட்டங்களை தாண்டி இந்த திட்டம் நிறைவு பெற காலதாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது இந்த நீர்தேக்க திட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால், இம்மாத இறுதியில் இந்த நீர்தேக்கம் தமிழக முதல்வரால் பயன்பாட்டிற்கு விடப்படும் என எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில், நீர் தேக்க திட்ட பணிகளை கடந்த வாரம் தமிழக முதல்வரின் கூடுதல் தலைமை செயலாளர் சாய்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் தொடர்ந்து ஆய்வு செய்து வந்த நிலையில், இறுதி கட்ட பணிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் மற்றும் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா ஆகியோரும் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது நீர்தேக்க பணிகளை பார்வையிட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் 1 வாரத்தில் கரைகள் அமைக்கும் இறுதி பணிகள் முடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து நீர்தேக்க கரையோர பகுதிகளில் கண்ணன்கோட்டை ஊராட்சி சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகளை பார்வையிட்ட ஆட்சியர் மரக்கன்றுகளை சிறபாக நட்டு பராமரித்த ஊராட்சி தலைவர் கோவிந்தசாமியை பாராட்டினார்.

இந்த நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் க.லோகநாயகி, கண்ணன்கோட்டை நீர்தேக்க திட்ட பொறியாளர் என்.தில்லைக்கரசி, உதவி பொறியாளர்கள் தனசேகர், சுந்தரம், பாபு, பத்மநாபன் ஆகியோர் உடனிருந்தனர்.
கண்ணன்கோட்டை பகுதி மக்கள் அதிருப்தி- கண்ணன் கோட்டை நீர்தேக்க திட்டத்திற்காக விவசாய நிலங்களை தந்தவர்களுக்கு உயர்நீதி மன்ற உத்தரவின் படி, சந்தை மதிப்பில் 4 மடங்கு இழப்பீட்டை அரசு வழங்காமல் , அரசு மதிப்பீட்டில் 2.4 மடங்கு மட்டுமே இழப்பீடு தந்துள்ளது. மேலும் நிலங்களை இழந்தவர்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகைக்கான வட்டி இன்னமும் தரப்படவில்லை, இந்நிலையில் முதல்வர் சில நாட்களில் இந்த நீர்தேக்க திட்டத்தை திறக்கபட உள்ளதாக அதிகாரிகள் கூறுவதாக, அதிருப்தி தெரிவித்தனர். மேலும் நீர்தேக்க பணிகள் நிலுவையில் உள்ளதாகவும், இதை முழுமையாக முடித்த பிறகே நீர்தேக்கத்தை திறக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து, அதிகாரிகளிடம் நாம் கேட்ட போது நீர்தேக்க திட்ட பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், கரைகளை பலப்படுத்தும் பணி உள்ளிட்ட ஒன்றிரண்டு பணிகள் உள்ள நிலையில் 10நாட்களில் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் , இந்த மாதத்திற்குள் இந்த நீர்தேக்கம் சென்னை மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு தயாராகி விடும் என்றனர். இந்த ஆய்வின் போது, பொன்னேரி கோட்டாச்சியர் வித்யா, கும்முடிபூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777
செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் இன் – 8939476777