Mon. Oct 19th, 2020

திருவள்ளூர் அருகே பராமரிப்பு இல்லா, ஆதிதிராவிடர் அரசு பள்ளிக்கூட கட்டிடம், முடங்கி கிடக்கிறதா, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை…

1 min read

திருவள்ளுர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்க்கு உட்பட்டது, பெரியகளக்காட்டூர் கிராமம். இந்த கிராமத்தில் ஆதிதிராவிட மாணவர்கள் பயில்வதற்க்காக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 1980 ஆண்டு அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி தொடங்கப்பட்டது.

அப்போது கட்டுமான பணிகளில் மணலுக்கு பதிலாக அந்த பகுதியின் ஏரியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை வைத்து ஒப்பந்ததாரர்கள் அந்த பள்ளி கட்டிடத்தை கட்டியுள்ளனர். இந்நிலையில், சுமார் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த பள்ளிக்கூட கட்டிடம் மிகவும் சேதம் அடைந்தும் ஜன்னல்கள் மற்றும் சுவர்கள் அதிகமாக இடிந்து அடிக்கடி விழுந்து வருகிறது. ஆனால் கொரோனா நோய் காரணமாக பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை தொடர்ந்து வருவதனால் மாணவர்களும் பள்ளிக்கு வராத நிலை காணப்படுகிறது.

எனவே, இந்த பள்ளி கட்டிட பாதிப்புகள் குறித்து, கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றினைந்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளை நேரடியாக சந்தித்து இந்த பதிப்புகள் குறித்த மனுவை அளித்துள்ளார்கள். ஆனால் அதிகாரிகள் இது குறித்து, எந்த ஒரு ஆய்வும் இதுவரை மேற்க்கொள்ளவில்லை என்றும் மற்றும் இந்த மனுவிற்க்கான அடுத்த கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கிராமமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கொரோனா தோற்று கால விடுமுறைகளுக்கு பின் இனி பள்ளிகள் தொடங்க ஆரம்பித்தாலும் மாணவர்களை இந்த ஆபத்து நிறைந்த பள்ளிக்கூடத்திற்கு அனுப்பமாட்டோம், என்று பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
” இந்த பாழடைந்த பள்ளிக்கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்க்கொள்ள
வேண்டும் என்றும், மனுக்களை பெற்றும் அதை பற்றி கண்டுக்கொள்ளாமல் அலட்சியம் காட்டிவரும் ஆதிதிராவிட நலத்துறை சார்ந்த அலுவலர்கள் மீது மாவட்ட ஆட்சியர் உடனடியாக விசாரணை மேற்க்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என பெரியகளக்காட்டூர் கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *