செங்குன்றம் பவானிநகரில் அமைக்கப்பட்டுள்ள 52 கேமராக்களை செங்குன்றம் காவல் ஆய்வாளர் பீட்டர் ஜவஹர் பாப்பு பாரவையிட்டார்…
1 min read
பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பவானிநகரின் பாதுகாப்பு கருதி பவானிநகர் சுற்றுவட்டார சமூக நல பாதுகாப்புக் குழுவினரால் 52 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்நிகழ்வின் துவக்கவிழாவில் சென்னை பெருநகர காவல் மாதவரம் மாவட்டம் காவல் துணை ஆணையாளர் டாக்டர் கே.பாலகிருஷ்ணன்,
புழல் சரக உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், செங்குன்றம் காவல் ஆய்வாளர் (குற்றவியல்) வசந்தன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

செங்குன்றம் காவல் ஆய்வாளர் பீட்டர் ஜவஹர் பாப்பு, பணிநிமித்தம் காரணமாக மதுரை சென்றிருந்ததால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை. தற்போது காசிமேடுக்கு பணி மாற்றம் ஏற்பட்டு செல்ல இருப்பதனால், பவானிநகரில் அமைக்கப்பட்டுள்ள கேமராவை பார்வையிட பவானி நகருக்கு வருகை தந்தார். இந்நிகழ்ச்சிக்கு பவானிநகர் சுற்றுவட்டார சமூக நல பாதுகாப்புக் குழுவின் செயலாளர் பி.என்.கே. கிருஷ்ணன் தலைமை தாங்கி பேசுகையில், இந்நகரில் கேமரா அமைப்பதற்கு முழு ஒத்துழைப்பு நல்கியதோடு, கைலாஷ் நினைவு அறக்கட்டளை துவக்கவிழாவில் காவல் ஆய்வாளர் கலந்து கொண்டு அறக்கட்டளையை துவக்கி வைத்தார். தன்னுடன் உரையாற்றும் போது, கைலாஷ் நினைவு அறக்கட்டளையின் நிகழ்வு எங்கு நடந்தாலும் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என்று கூறியதை சுட்டிக் காட்டினார்.

பொருளாளார் டெக்ரேட்டர் பி.சேகர் வரவேற்புரையாற்றி, ஆய்வாளர் ஜவஹர் பீட்டரை பற்றி நினைவு கூர்ந்தார். இவரைப் போன்ற காவல் அதிகாரிகள் செங்குன்றத்திற்கு கிடைத்தது மிகப் பெரிய பொக்கிஷம் என்றார். கௌரவ ஆலோசகர்கள் இ.மாரியப்பன், வார்டு உறுப்பினர் கே.ராஜவேலு ஆகியோரும் சிறப்புரையாற்றினர். துணைத்தலைவர் ஏ.இருதயராஜ், கணக்கு தணிக்கையாளர் ஏ.ஜோசப், கௌரவ ஆலோசகர் எம்.ஜான் அலோசியஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணைச் செயலாளர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் உரையாற்றுகையில், பவானிநகரில் கேமரா அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது என்பதை பற்றியும், பீட்டர் ஜவஹருக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி ஏற்பாட்டினையும் விளக்கி பேசினார். ஆய்வாளர் பீட்டர் ஜவஹர் பாப்பு தன்னுடைய உரையில், பவானி நகரில் கேமரா அமைப்பதற்காக நிர்வாகிகள் அணுகிய போது, அனைத்து ஆலோசனைகளையும் வழங்கினோம். செங்குன்றம் காவல் நிலையத்திற்குட்பட்டு 52 கேமரா பவானி நகரில் மட்டும் தான் அமைக்கப்பட்டுள்ளது என்றும்,

துவக்க விழா நிகழ்வில் நான் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும், என்னால் முடிந்த அளவு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்து முயற்சிகளும் காவல்துறை உயரதிகாரிகளால் எடுக்கப்பட்டது. எல்லோரும் இணைந்து நகரில் குற்றங்கள் நடைபெறாத வண்ணம் கேமரா அமைப்பதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்றீர்கள் என்றும், ஒற்றுமையே உயர்வுக்கு வழி என்றும் கூறினார். இதில் செயற்குழு உறுப்பினர்கள் பொன்தாமரை கண்ணன், எம்.ஏ.முத்துமீரான், எஸ்.சேகர் (அம்மன்), ஏ.ஆனந், ஐ.அந்துவான் சத்தியநேசன், ஜெ.ஜீலியன், எஸ்.ரமேஷ், எஸ்.அப்துல் வகாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பவானிநகர் சுற்றுவட்டார சமூக நல பாதுகாப்புக் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் காவல் ஆய்வாளர் பீட்டர் ஜவஹர் பாப்புவுக்கு மாலை, சாலை அணிவித்து மரியாதை செய்து வழியனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் – ரெட்ஹில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777