புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு, பைப் லைன் அமைக்கும் பணிகளை, மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் துவக்கி வைத்தார்…
1 min read
புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த குடிதண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண ரூ. 18,75,000 நிதி ஒதுக்கீடு செய்து மாத்தூர் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து (போர்) அங்கிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு பைப் லைன் அமைக்க துவக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு விளாங்காடுபாக்கம் முதல் நிலை ஊராட்சி மன்றத் தலைவர் ச.பாரதி சரவணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலாவதி நந்தகுமார் வரவேற்புரையாற்றினார். புழல் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர், விளாங்காடுபாக்கம் ஊராட்சி கழக திமுக செயலாளர் வழக்கறிஞர் பெ.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பைப் லைன் அமைக்கும் பணியை துவக்கி வைத்து உரையாற்றுகையில், இந்த ஊராட்சி மன்றத் தலைவர் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உடனடியாக எனது அலுவலகத்திற்கு வருகை தந்து அந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை என்னுடனே இருப்பார் என்றார்.

ஊராட்சி மன்றத் தலைவர் ச.பாரதி சரவணன் உரையாற்றுகையில்,
” ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நலக் கூடம் உள்ளிட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களை எம்எல்எ நிதி மற்றும் பல்வேறு வகை நிதியிலிருந்து ஏற்பாடு செய்து பூர்த்தி செய்து தருகின்றோம். ஊர் மக்களின் ஒத்துழைப்போடு இந்த ஊராட்சியில் இன்னும் பல்வேறு நலப்பணிகளை ஆற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள இருக்கின்றோம். மேலும், ஊராட்சி மன்றக் கட்டிடம் கட்டுவதற்கு என்ஆர்ஜிஎஸ்ஒய் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரிடமிருந்து ரூ. 12 லட்சம் பெற்று தந்துள்ளார் எம்எல்ஏ. இன்னும் 10 லட்சம் ரூபாய் நிதி தேவைப்பட்டதை கூறிய போது, அதையும் உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்” என்று கூறினார்.

சமுதாயக் கூடம் சுற்றுச்சுவருக்கு ரூ. 12 லட்சம், மேட்டுத் தெரு, பெரிய தெரு கோட்ரஸ் சிமெண்ட் சாலை உள்ளிட்ட சாலைகள் 15வது திட்ட நிதியிலிருந்தும் போடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
இந்நிகழ்வில் பனை விதையை நடவு செய்வதற்கு மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ துவக்கி வைத்தார். வழக்கறிஞர் ஆர்.செல்வமணி, ரெட்ஹில்ஸ் நண்பன் இதழ் ஆசிரியர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் உள்ளிட்ட பொதுமக்களும் பெற்றுக் கொண்டனர். அழிஞ்சிவாக்கம் ஊராட்சி தலைவர் ஆஷா கல்விநாதன், முன்னாள் தலைவர் வழக்கறிஞர் ஆர்.செல்வமணி, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ந.ஆனந்தி நாகராஜன், ஏ.எல். மாரி, கே.சத்தியசீலன், எஸ்.அருணா தேவி சீனு, ஆர்.தர்மி ரவி, எஸ்.ரதி சீனிவாசன், எம்.நிலவழகி இனியன், என்.மாரியம்மாள் நரசிம்மன், வி.பாரதியார், மல்லிராஜன், பரிமளச் செல்வம், எழிலன், சக்திவேல், கோபி, டில்லி, காமராஜ், தங்கராஜ், திருநாவுக்கரசு உள்ளிட்ட பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஊராட்சி செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

செய்தியாளர் – ரெட்ஹில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
