பெரியபாளையம் பேங்க் ஆப் பரோடா வங்கியின் 50-வது ஆண்டு துவக்க விழாவை கேக் வெட்டி கொண்டாடினர்…
1 min read
இந்தியாவில் இயங்கி வரும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் முதன்மையாக விளங்குவது எஸ்.பி.ஐ வங்கி ஆகும். இரண்டாவது இடத்தை பேங்க் ஆப் பரோடா வங்கி பெற்றுள்ளது. அப்போதைய மகாராஜா குடும்பத்தைச் சேர்ந்த சுயஜிராவ்ஜெயக்வார்டு என்பவர் பேங்க் ஆப் பரோடா வங்கியை துவக்கினார்.

இந்த வங்கி தற்போது இந்தியா முழுவதும் 9,200 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் இயங்கி வரும் பேங்க் ஆப் பரோடா வங்கி 13.10.1971 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
எனவே, இந்த வங்கி 49 ஆண்டுகள் கடந்து 50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இதைக் கொண்டாடும் வகையில் வங்கியை பூக்களால் அலங்கரித்து வங்கி சார்பில் முதல் வாடிக்கையாளரை வரவழைத்து கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வங்கியின் முதன்மை கிளை மேலாளர் நந்தகிஷோர் தலைமை தாங்கினார். இந்த வங்கியின் முதல் வாடிக்கையாளர் முனுசாமி அவர்களை கேக் வெட்ட வைத்து அவருக்கு மரியாதை செலுத்தினர்.

இதன் பின்னர், வாடிக்கையாளர்களுக்கும்- வங்கி ஊழியர்களுக்கும் கேக் மற்றும் இனிப்பு, குளிர்பானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. முன்னதாக அனைவரையும் வங்கியின் பீல்டு ஆபீசர் நான்சி வரவேற்றார். முடிவில், அனைவருக்கும் வங்கியின் துணை மேலாளர் ஜெனிஃபர் நன்றி கூறினார்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939576777