புழல் ஒன்றியம் தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சியில் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மரகன்றுகள், பனைவிதைகள் நடும் விழா…
1 min read
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜெ. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சியில் 500 மரகன்றுகள், பனைவிதை நடும் விழா மற்றும் 500 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா டேவிட்சன் தலைமையில் பாலவாயில் கெங்கையம்மன் கோவில் குளம், கோட்டூர் எல்லத்தம்மாள் கோவில் அருகே நடைபெற்றது.

துணைத்தலைவர் இ.அருண்குமார் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் டி.தரணிதரன், சாந்தி மூர்த்தி, வேளாங்கண்ணி சரவணன், கீதா விஜி ஆகியோர் வரவேற்புரையாற்றினார். புழல் சரக உதவி ஆணையர் ராம.ஸ்ரீகாந்த், நடிகர் ஸ்ரீநாத் அல்நாத், புழல் ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி திருமால், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர், மனித உரிமை – குற்ற தடுப்பு அமைப்பு தலைவர் டாக்டர் அன்பு சுந்தரம் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளையும் பனைவிதைகளையும் நடும் பணியை துவக்கி வைத்து அன்னதானம் வழங்கினர்.

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜெ.முருகன், டேங்கர் கே.பாபு, ஜி.அப்பு, எம்.சரவணன், எம்.சதீஷ், அத்திவாக்கம் ஆர்.மணி, சமூக பணிக்குழு அறக்கட்டளை தலைவர் இ.பாலாஜி, செயலாளர் சமீர் உள்ளிட்ட பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் கே.யுகேஷ்குமார் நன்றி நவின்றார்.

செய்தியாளர் – ரெட்ஹில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
