மீஞ்சூரில், விவசாயிகள் சாலைமறியல் செய்ய முயற்சி, போலிசார் சமாதானம்…
1 min read
ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று விவசாயிகள் கூட்டத்திற்க்கு அதிகாரிகள் யாரும் வராத்தால் விவசாயிகள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடத்தபடும் என்றும், கொரோனா தொற்று பிரட்சனை காரணத்தால், கூட்டம் காணொளி காட்சி மூலம் நடத்தப்படும் எனவும், அந்த ஆலோசனை கூட்டத்தில், அந்ததந்த ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள் அந்ததந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களின் குறைகளை தன்னிடம் கூறலாம், என மாவட்ட ஆட்சியரே அனைத்து விவசாயிகளுக்கும், குறுஞ்செய்தியாக வாட்சப் மூலம் தகவல் கொடுத்து இருந்தார்.

அதன்படி, இன்று காலை 9 மணியில் இருந்தே விவசாயிகள் மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் கூட துவங்கிவிட்டனார். அந்த கூட்டத்தில், வருவாய் துறை, விவசாய துறை, மின்சார துறை, தோட்டகலை துறை உட்பட மேலும் பல துறைகளில் இருந்து அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும். ஆனால், 11 மணிக்கு மேலும் அந்த கூட்ட அரங்கிற்க்கு ஒரு அதிகாரியும் வராததால், குழப்பம் அடைந்த விவசாயிகள் அங்கிருந்த அதிகாரிகள் அனைவரிடமும் கேட்டும் எந்த பலனும் இல்லை, அவர்கள் அனைவரும், “இந்த கூட்டம் குறித்து எங்கள் யாருக்கும் தகவல் இல்லை” என ஒருமித்த குரலில் கூறியுள்ளனர்.

அதனால் விவசாயிகள் வெகுநேரம் காத்திருந்தும் எந்த துறை அதிகாரியும் வராததால், ஆத்திரம் அடைந்து மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக, பொன்னேரி – பஞ்செட்டி சாலையில் மறியல் செய்ய முடிவெடுத்தனர். இது குறித்த, தகவல் அறிந்து அங்கு வந்த மீஞ்சூர் போலிசார் விவசாயிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதனால் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இதே கூட்டம், கும்முடிபூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்து அதில், விவசாயிகள் யாரும் வராததால், விவசாய துறை அதிகாரிகள் மட்டும் காணொளி காட்சி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளனர்.
எல்லாபுரம் ஒன்றியத்திற்க்கு ஊத்துகோட்டையில் சில விவசாயிகளுடன் கூட்டம் நடந்து உள்ளது. அதேபோல் பெரும்பாலுமான ஒன்றியத்தில் விவசாயிகள் அதிகளவில் கலந்து கொள்ளாததால் அதிகரிகளே கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

அரசு எந்த ஒரு கூட்டத்தையும் காணொளி காட்சி மூலம் நடத்துவது நல்ல விசயம் தான், அதனால் அதிகாரிகளின் நேரம், மக்களின் நேரம், மற்றும் போக்குவரத்து செலவுகள் குறையும். அதனால், இது போன்ற காணொளி காட்சி கூட்டத்தால் பலன் உள்ளது, ஆனாலும் மாவட்ட ஆட்சியர் நேரடியாக கலந்து கொள்ளும் கூட்டம் என்றால், அதிகாரிகளும், விவசாயிகளும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆகவே, ” மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தையும், சுழற்சி முறையில் ஒவ்வொரு கோட்டாசியர் அலுவலகத்திலும் நடத்தினால் நன்றாக இருக்கும்” என விவசாயிகள் தங்கள் கருத்தை கூறினர்.

நிழல்.இன் – 8939476777