கும்முடிப்பூண்டி அருகே எளாவூர் சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல்- மூவர் கைது…
1 min read
கும்முடிபூண்டி டுத்த ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எளாவூர் ஏழுகிணறு பகுயில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் கவரப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் காவலர்கள் சுரேஷ், சக்திவேல், ராஜேந்திரன் உள்ளிட்ட போலீஸார் இன்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த பாண்டிச்சேரி பதிவு எண் கொண்ட சொகுசு காரை மடக்கி நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது, காரின் பின்பகுதியில் பண்டல் பண்டலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே, போலீசார் காரில் இருந்த 3 பேரை கைது செய்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்த சக்திவேல் (26), ஜெயச்சந்திரன்(44), மதுரையை சேர்ந்த பாலகிருஷ்ணன்(60) என தெரியவந்தது. தொடர்ந்து காரில் பறிமுதல் செய்யப்பட்ட 20 பண்டல்களில் இருந்த 50கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்த போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கஞ்சா கடத்தப்பட இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் மேற்பார்வையில் ஆரம்பாக்கம் போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் மேற்பார்வையில் எளாவூர் ஏழுகிணறு ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் நடைபெற்ற வாகன சோதனையில் 12 வழக்குகளில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் 50கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் மட்டும் இல்லாமல், மாவட்டத்தையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777