டாக்டர் அப்துல் கலாம் கல்வி, பசுமை அறக்கட்டளை சார்பில் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் விழா…
1 min read
ஜனாதிபதி டாக்டர் ஏபிஜெ. அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாள் விழா மற்றும் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழா, சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் விழாவை முப்பெரும் விழாவாக,
டாக்டர் அப்துல் கலாம், பசுமை அறக்கட்டளையின் திருவள்ளூர் – சென்னை மாவட்ட நிர்வாகிகள் இணைந்து புழல் செயின்ட் அந்தோணி பள்ளி வளாகத்தில் நடத்தினர்.

டாக்டர் அப்துல் கலாம் மற்றும் பசுமை அறக்கட்டளையின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் டாக்டர் என்.நரேஷ், சென்னை மாவட்ட தலைவர் டாக்டர் டி.சுந்தர் ஆகியோர் தலைமையேற்று விழாவினை சிறப்பாக நடத்தினர். அதில், பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அனுராதா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார். நியூஸ் 18 தொலைக்காட்சியின் நெறியாளர் கவிஞர் பாலவேல் சக்கரவர்த்தி டாக்டர் அப்துல் கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனை உயர் வேதியல் துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராஜேந்திரன், புழல் வட்டார வியாபார சங்கத் தலைவர் செல்லத்துரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு சமூக சேவை செய்து மக்கள் மனதில் வாழும் சேவகர்களுக்கு விருதினை வழங்கி சிறப்புரையாற்றினர். இதில் சமூக பணிக்குழு அறக்கட்டளை தலைவர் பாலாஜி, சமீர் ஆகியோர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதில் அறக்கட்டளை நண்பர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு விருது பெற்றவர்களை வாழ்த்தினர்.

செய்தியாளர் – ரெட்ஹில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
