Fri. Oct 23rd, 2020

மீஞ்சூர் ஒன்றியம், தேவதானம் ஏரியில், பொன்னேரி ஆர்.டி.ஓ பனைவிதைகளை நடவு செய்தார்…

1 min read

மீஞ்சூர் ஒன்றியம், தேவதானம் ஊராட்சியில், ஏரி மற்றும் நீர்நிலைகளில் பனைவிதைகள் நடவு செய்வதற்கான பணி, தமிழக அரசு பொதுபணி துறையின் மூலம் தற்போது குடிமராமத்து பணிகளை செய்யபட்ட தேவதானம் ஏரியில் துவக்கபட்டது.

அந்த ஏரியின் கரைகள் மற்றும் ஏரியின் உள் பகுதிகளிலும், மக்கள்நலப்பணி இயக்க அறக்கட்டளையின் சார்பில், பனைவிதை நடவு செய்யும் நிகழ்ச்சி நடத்தபட்டது. இந் நிகழ்ச்சி, ஊராட்சிமன்ற தலைவர் லட்சுமி தலைமையிலும், துணைத்தலைவர் நளினி முன்னிலையிலும் நடந்தது. அதில், பொன்னேரி கோட்டாச்சியர் வித்யா அவர்கள் கலந்து கொண்டு பனைவிதையை நடவு செய்தார். பின்னர் அங்கு கூடியிருந்த பெண்களிடம் பனைமரத்தின் பயன்கள் குறித்தும், அதன் முக்கியதுவம் குறித்தும் உரையாற்றினார்.

முன்னதாக, மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளையின், தலைவர் பாலகிருஷ்ணன் பனையின் பயன்கள் குறித்தும், பனை பொருட்களின் மூலம் கைவினை பொருட்கள் மற்றும் பனைவெல்லம் உற்ப்பத்தி செய்வதற்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது குறித்தும் பேசினார். இந் நிகழ்ச்சியில் மேலும், அமமுகவின் தேவதானம் ஊராட்சி செயலாளர், பொன்னையன், தேவதானம் ஊராட்சியில், விதைப்பிற்க்கு தேவையான பனைவிதைகளை வழங்கிய, சமூக ஆர்வலர் சுப்பிரமணி, முனிரத்தின நாயுடு, பாபு மற்றும் வார்டு உறுப்பினர்கள் கமலா, பாரதி, லதா, சுந்தரம், கஸ்தூரி, ஆகியோரும் கலந்து கொண்டனர். இறுதியாக, ஊராட்சி செயலாளர்கள் விமலா நன்றி கூறினா4.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *