November 28, 2020

எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைபேர் ஏரியில் பனைவிதை நடும் பணி துவக்கம்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் எலைட் பள்ளிக் குழுமம், காந்தி உலக மையம் மற்றும் காக்கை அறக்கட்டளை சார்பாக, கண்ணிகை பேர் ஊராட்சியில் ஏரிக்கரை மேல் 1,600 பனை விதை நடவுத் துவக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில், எல்லாபுரம் ஒன்றியப் குழு பெருந்தலைவர் வடமதுரை ரமேஷ் கலந்து கொண்டு பனை விதைகள் நடும் பணியை துவக்கி வைத்தார். இதில் துணைப் பெருந்தலைவர் சுரேஷ் , ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயலட்சுமி குமார், கன்னிகைப்பேர் ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி உதயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அகஸ்டின்ராஜ் மற்றும் . வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், எலைட் பள்ளிக் குழுமத்தின் முதன்மை நிர்வாகி முனைவர் பால் செபாஸ்டியன், ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு வைத்து அதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
நிகழ்வின் முத்தாய்ப்பாக பனைப் பொருட்கள் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது. பனையின் மூலம் இவ்வளவு பொருட்களை செய்ய முடியுமா என பொதுமக்கள் வியந்து அதனைக் கண்டு களித்தனர்.

செய்தியாளர் சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *