November 25, 2020

பொன்னேரி அருகே, கல்மேடு பகுதியில் கோழிப் பண்ணையில் பயங்கர தீ விபத்து.

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளுமேடு என்ற பகுதியில், பிரேம் என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணை உள்ளது.

இதில், இன்று விடியற்காலையில் தீ விபத்து ஏற்பட்டது. கோழி குஞ்சுகளுக்கு சூடுபடுத்தும் சாதனத்தில் மின்சார கசிவு ஏற்ப்பட்டு தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து, உடனடியாக பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர்.

இதில், ஒன்றரை லட்சம் மதிப்பிலான கோழிக்குஞ்சுகளும், கொட்டகையும் தீக்கிரையாகின. இந்த தீ விபத்து குறித்து பொன்னேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *