November 25, 2020

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சியில்,
முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சியில், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொன்னேரி காவல் துறையினர் இணைந்து, முக கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொன்னேரியில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொண்டு வரும் நிலையில், பொன்னேரி டி.எஸ்.பி கல்பனாதத் அவர்கள் மேற்பார்வையில் பொன்னேரி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் ஆகியோர், பொன்னேரி பகுதிகளில் முககவசம் அணியாமல் நடமாடிய, வாகனங்களில் சென்ற மக்களுக்கு இலவசமாக முககவசங்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கட்டாயம் முக கவசம் அணிவேண்டும் என்றும், அப்படி முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பொன்னேரியில் முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டும் எச்சரிக்கப்பட்டும் வாகன ஓட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *