November 25, 2020

பொன்னேரியில், புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைக்கும் இடத்தை எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்…

1 min read

பொன்னேரி வட்டாசியர் அலுவலகம் புதியதாக கட்டபட உள்ள இடத்தை, சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம் பலராமன், ஆர்.டி.ஓ வித்யா ஆகியோர் பார்வையிட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாசியர் அலுவலகம் தற்போது மிகவும் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஆகவே பொன்னேரி வட்டாசியர் அலுவலகம் புதியதாக கட்ட வேண்டி தமிழக அரசிற்க்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம் பலராமன் அவர்கள் கோரிக்கை வைத்திருந்ததை தொடர்ந்து, தற்போது பொன்னேரி வட்டாசியர் அலுவலகம் 3 கோடியே 75 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டபட உள்ளது. அந்த புதிய கட்டிடம் கட்டும் இடத்தை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் தலைமையில், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதலில் இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. பின்பு எம்.எல்.ஏ புதிய வட்டாசியர் அலுவலகம் கட்டபட உள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வில் ஈடுபட்டார். இந்த ஆய்வின்போது பொன்னேரி கோட்டாட்சியர் வித்யா, பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன், பொதுப்பணித்துறை கட்டுமான பணி உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

செய்திகள் – மில்டன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *