பொன்னேரியில், இளைஞர் பாசறை, இளம் பெண் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்…
1 min read
வடக்கு மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி சார்பில், அதிமுக இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் பொன்னேரி அடுத்த ஆண்டார் குப்பத்தில் நடந்தது.

இந்த முகாம், திருவள்ளுர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி பி பி பரமசிவம் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் பானுபிரசாத் சோழவரம் ஒன்றிய செயலாளர் கார்மேகம் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பிரகாஷ் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் ரவிச்சந்திரன் பஞ்சட்டி ஊராட்சித் தலைவர் சீனிவாசன் பெரவள்ளுர் கிளைச் செயலாளர் தமிழ்செல்வன் மற்றும் இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் – மில்டன்
நிழல்.இன் – 8939476777