November 28, 2020

பொன்னேரியில், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…

1 min read

பொன்னேரி துணை மின் நிலையத்தில், பல வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தம் கோரி, மின்வாரியத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று சிஐடியு சார்பில் ஒப்பந்த ஊழியர்கள் பகுதிநேர ஊழியர்கள் கருணைத் தொகை வழங்கக்கோரியும், போனஸ் வழங்க கோரியும், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யக் கோரியும், பொன்னேரி துணை மின் நிலையம் எதிரில், கோட்ட செயலாளர் ஜெயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்திகள் – மில்டன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *