November 25, 2020

பொன்னேரி பேரூராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்திட கோரி, கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

1 min read

பொன்னேரி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை முடிவடையாமல் ஆமை வேகத்தில் நடந்து கொண்டு இருப்பதை விரைந்து முடிக்க கோரியும், அதனால் சேதப்படுத்தபட்ட அனைத்து சாலைகளையும் சீரமைக்க கோரியும், மழை நீர் தேங்கிய சலைகளை உடனடியாக தற்காலிகமாகவாவது சீரமைக்க கோரியும், குண்டும், குழியுமான சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது என்பதை வழியுறுத்தியும், ஆகவே, பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க கோரியும், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்திகள் – மில்டன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *