மீஞ்சூரில் விபத்துகளை தவிர்க்க வேண்டி, வியபாரிகள், பொதுமக்களுடன், போலிசார் ஆலோசனை…
1 min read
மீஞ்சூரில் விபத்துக்களை தடுத்திட வியாபாரிகளுடன் காவல்துறை கலந்துரையாடல். மீஞ்சூர் பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்துக்களை குறைத்தல், சாலையோர சிறு கடைகளை முறைப்படுத்ததல் ஆகியவற்றிற்காக மீஞ்சூர் வியாபாரிகளுடன் மீஞ்சூர் காவல்துறையினர் கலந்துரையாடல் நடத்தினர்.

இதில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மதியரசன் உதவி காவல் ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் பல்வேறு வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். இந்த ஆலோசனை கூட்டத்தில், மீஞ்சூர் வியாபாரிகள், சிறு வணிகர்கள், பொதுமக்கள் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – மில்டன்
நிழல்.இன் – 8939476777