November 27, 2020

வட சென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவால் பாதிக்கபடும் மக்களுக்கு, மாற்று இடம் கோரி ஆர்ப்பாட்டம்…

1 min read

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் இயங்கி வரும் வட சென்னை அனல் மின்நிலைய சாம்பல் கழிவால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் மாற்று இடம் கோரி, காட்டுபள்ளி ஊராட்சிமன்ற தலைவர் சேதுராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மேலும், சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் விஜயன், மற்றும் நிர்வாகிகள் வினாயக மூர்த்தி, நரேஷ்குமார், வெங்கட்ராஜ், ஏழுமலை, காஞ்சனா, சங்கீதா உட்பட அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி அவர்கள் பேசுகையில், வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளிவரும் சாம்பல் கழிவுநீர் குழாய் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊரணம்பேடு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள குளங்களில் சேமிக்கப்பட்டு வருகின்றன. அப்படி செப்பாக்கம் கிராமம் வழியாக இரும்பு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும் அந்த குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாம்பல் கழிவுகள் கொதிநீருடன் கிராமத்துக்கு உள் செல்வதால் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படுகிறது.

மேலும், அப்பகுதி நிலத்தடி நீர் மாசு அடைகிறது, இங்கு வாழும் அனைத்து மக்களும் மூச்சு விட முடியாமல் அவதிப்படுவதுடன், பல சுவாச நோய்களுக்கும், தோல் சம்மந்தமான நோய்களுக்கும், உள்ளாகின்றனர். ஆகவே, அவர்களுக்கு வசிப்பதற்க்கு மாற்று இடம் வழங்க கோரியும், மேலும் அப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், வடசென்னை அனல்மின் நிலைய நிர்வாகத்திடம் நானும், ஊராட்சிமன்ற தலைவரும் கோரிக்கை வைத்ததுடன், அனல் மின்நிலைய அதிகாரிகளை நேரடியாக அப்பகுதிக்கு நேரில் அழைத்து சென்று பார்வையிடவும் செய்தோம். ஆனால், இதுவரை அப்பகுதி மக்களுக்கு இந்நிர்வாகம் எந்த உதவியும் செய்யவில்லை. இதற்க்கும் மேலும் இவர்கள் காலதாமதம் செய்தால், போராட்டம் வேறுவிதத்தில் வடிவமைக்கபடும். என உரையாற்றினார்.

செய்திகள் – மில்டன் நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *