November 27, 2020

ஆந்திராவில் இருந்து காரில் கொண்டு வரப்பட்ட 1.25 கோடி பணம், வெள்ளிகளை தமிழக – ஆந்திர எல்லையில் காவல் துறையினர் பறிமுதல்…

1 min read

தமிழக – ஆந்திர எல்லையான, எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில்தமிழக காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டதில் அதில் பண்டல் பண்டலாக ரொக்கப்பணம், மற்றும் வெள்ளிக்கட்டிகள், வெள்ளி கொலுசுக்கள் கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ₹1.25 கோடி பணம், 9 கிலோ வெள்ளி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து காரில் வந்த 4 பேரிடம் தீவிர நடத்தினர். விசாரனையில் அவர்கள் பெயர்கள் அசோக், சதீஷ்குமார், ரஹ்மான், ஷேக் அன்சாரி என்பது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் ஆந்திர மாநிலம் ஷீராளாவில் இருந்து சென்னைக்கு நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். எனினும் பணத்திற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் ஹவாலா பணமா என காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து ₹1.25 கோடி பணம், 9 கிலோ வெள்ளியுடன் 4 பேரையும் ஆரம்பாக்கம் காவல் துறையினர் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *