November 27, 2020

கும்மிடிப்பூண்டி அருகே, அடுத்தடுத்த 4 வீடுகளில் கொள்ளை முயற்சி தோல்வியால், கதவில் பட்டாக்கத்தியை சொருகி வைத்து சென்ற கொள்ளையர்கள்…

1 min read

மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தில், அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாலும், கதவை திறக்கவும் முடியாத விரத்தியில் கொள்ளயடிக்க வந்த கொள்ளையர்கள் கொண்டு வந்த பட்டா கத்தியை, கதவில் சொருகி வைத்து விட்டு சென்றுள்ளனர்.

பின்னர், அருகில் இருக்கும் அரசு பள்ளியின் பூட்டை உடைத்து, உள்ளே சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். பள்ளி வளாகத்திலேயே மது அருந்திவிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கொள்ளையடிக்க வந்த இடத்தில் வீட்டின் கதவில் கொள்ளையர்கள் பட்டாக்கத்தியை சொருகி வைத்துச் சென்ற சம்பவம், அந்த பகுதியில் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *