November 27, 2020

பொன்னேரி அருகே, இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி, ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை மர்ம கும்பல் வெறிச்செயல்…

1 min read

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(35) ரியல் எஸ்டேட் அதிபரான இவர், தற்போது தமது குடும்பத்துடன் பொன்னேரியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மீஞ்சூரில் இருக்கும் தனது நண்பரை அழைத்துக்கொண்டு ஒரு வேலை விசயமாக ஸ்ரீபெருமந்தூர் செல்ல வேண்டி, வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, இலவம்பேடு பகுதியில் அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர், சரவணன் ஒட்டி வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது காரை மோதி உள்ளனர். அதில், சரவணன் நிலைதடுமாறி கீழே விழுந்த போது, மர்ம நபர்கள் சுற்றிவளைத்து அரிவாளால் சரவணனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலில், பலத்த காயமடைந்த சரவணனை தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீஞ்சூர் காவல் துறையினர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தொழில் போட்டி காரணமாக சரவணன் கொலை செய்யப்பட்டாரா.. அல்லது, சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா, என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இது குறித்து, தகவல் அறிந்த, திருவள்ளுர் எஸ்.பி. அரவிந்தன் பொன்னேரி டி.எஸ்.பி. கல்பனா தத் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

செய்திகள் – மில்டன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *