November 27, 2020

மீஞ்சூர் ஒன்றிய ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்…

1 min read

மீஞ்சூர் ஒன்றிய ஊராட்சிமன்ற கூட்டமைப்பின் சார்பில், கூட்டமைப்பு தலைவர் மேலூர், நிலவழகன் அவர்கள் தலைமையிலும், செயலாளர் பாலன் மற்றும் பொருளாளர் பூசணம்பிரகாசம் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர் பிரிவில் உள்ள அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்களை மிரட்டும் போக்கை கண்டித்தும், 14 வது, நிதிகுழு மானியம் மூலமாக ஊராட்சிமன்ற நிர்வாகமே முடிவெடுத்து எந்த பணியையும் செய்யலாம் என உயர்நீதிமன்றமே அறிவித்துவிட்ட பிறகும் அதிகாரிகள், தலைவர்களை பணி செய்யவிடாமல், பணி ஆணை வழங்க காலதாமதம் செய்வதை கண்டித்தும்.

100 நாள் பணிக்கான அட்டையை இதுவரை புதிய தலைவர்கள் வழங்க முடியாத சூழலை அதிகாரிகள் உருவாக்குவதை கண்டித்தும், 100 நாட்கள் வேலையை 250 நாட்களுக்கு வழங்கவும், ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரியும், ஏறுசிவன் ஊராட்சி செயலாளர் ரமேஷ் என்பவர் அந்த ஊராட்சிமன்ற தலைவரை மிரட்டும் அளவிற்க்கு அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டதை கண்டித்தும். ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் செயல் தலைவர் மேலுர் நிழவழகன் அவர்கள் பேசுகையில், கடந்த 6 மாதங்களாக எந்த ஊராட்சிக்கும், அரசு சரியாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் குடிநீர் ஆபரேட்டர்கள், மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கூட ஊதியம் வழங்கபடாமல் உள்ளது, மேலும் பல ஊராட்சிமன்ற தலைவர்கள் தங்கள் குடும்பத்தினரின் நகைகளை அடகு வைத்து ஊழியர்களுக்கு சில மாதங்களாக ஊதியம் கொடுத்து வருகிறோம், இனி அதற்க்கு கூட வாய்ப்பு இல்லை, வேறு நிதியில் இருந்து ஊதியம் வழங்க அனுமதி கேட்டோம் அதற்க்கும் அதிகாரிகள் இதுவரை சரியான பதில் கூறாமல் அலட்சியமாக இருக்கிறார்கள் ” என பேசினார்.

செய்திகள் – மில்டன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *