பழவேற்காடு பகுதியில் வாழும் புள்ளிமான்களை அரசு பாதுகாக்க வேண்டும் பொது மக்கள் எதிர்பார்ப்பு…
1 min read
பழவேற்காடு பகுதியில் கடலுக்கும், ஆற்று பகுதிக்கும் இடைபட்ட காட்டு பகுதி, ஸ்ரீஹரிகோட்டா வரை நீண்டு பரவி உள்ளது. 82ம் ஆண்டுகளில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளமும், தற்போது தமிழக கடற்பகுதியான பழவேற்காடு முதல் எண்ணூர் வரை உள்ள பகுதிகளில் அனல் மின்நிலையங்கள், துறைமுகம், உட்பட பல பெரிய,பெரிய கம்பேனிகள் கால் ஊன்றி விட்டதால், அந்த கடற்கரை காட்டு பகுதி தொடர்ந்து அழிக்கபட்டு வருகிறது. அதனால் புள்ளிமான்கள் அவ்வபோது அடிக்கடி பழவேற்காட்டை சுற்றியுள்ள ஊர்களில் தஞ்சம் அடைகின்றன.

அந்த சமயங்களில் சில ஆண்டுகளாக, அவைகள் வாகனங்களில் அடிபட்டும், நாய்களால் கடித்து தாக்கப்பட்டும், இறப்பது தொடர் சம்பவங்களாக நடந்து வருகின்றன. அந்த நேரங்களில் மக்கள் தகவல் கொடுத்தால், வனதுறை அதிகாரிகள் ஓடோடி வந்து, இறந்து போன மான்களையும், உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் மான்களையும், வந்து எடுத்து செல்கின்றனர். ஆனால், அதற்க்கு ஒரு தீர்வை தான் அவர்களுக்கு மேல் இருக்கும் அதிகாரிகளிடம் பேசி முடிவுக்கு கொண்டுவராமல் காலதாமதம் செய்கின்றனர். அதற்க்குள் அடுத்து இதோ ஒரு, புள்ளிமானை பலி கொடுத்து விட்டோம்…

நேற்று, பொன்னேரி அடுத்த சோமஞ்செரி கிராமத்தில் முட்புதரில் சிக்கி புள்ளிமான் இறந்து போன நிலையில், இருப்பதை கண்ட , பொதுமக்கள் மீட்டு கும்மிடிப்பூண்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உட்னே விரைந்து வந்த வனதுறையினர், இறந்து போன புள்ளிமானை பெற்று கொண்டு இது குறித்து, விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் – மில்டன்
நிழல்.இன் – 8939476777