November 25, 2020

பொன்னேரியில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்…

1 min read

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த சரவணன்(36) ரியல் எஸ்டேட் தொழிலுடன், கட்டடம் கட்டும் ஒப்பந்த தொழிலும் செய்து வந்ததாக தெரிகிறது.

பொன்னேரி என்ஜிஓ நகரில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இலவம்பேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தை வழி மறித்து சரவணனை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இது குறித்து விசாரணை செய்து வந்த பொன்னேரி காவல் துறையினர், 5 பேரை கைது செய்துள்ளனர்.

சரவணனுக்கும், ஏலியம்பேடு பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களாக இருந்தவர்களிடையே வாகன திருட்டு தொடர்பாக பிரச்சினை எழுந்து கைதாகி பின் இருவரும் பிரிந்ததாகவும், தற்போது மகேஷ் எடுத்துள்ள கட்டடம் கட்டும் ஒப்பந்தத்தில் பங்கு கேட்டு, ஞாயிறன்று வீட்டிற்கே சென்று மிரட்டியதால், சரவணனை, மகேஷ் தமது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து மகேஷ் மற்றும் அவனது கூட்டாளிகளான நந்தகுமார், பிரகாஷ் ,சுரேஷ், சண்முகம் ஆகிய 5 பேரை பொன்னேரி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

செய்திகள் – மில்டன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *