ஆர்.கே. பேட்டை ஒன்றியத்தில், பாலாபுரம், ஊராட்சியில், புதிய நூலக கட்டிடத்தை நரசிம்மன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்…
1 min read
திருத்தணி தாலுகா, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், பாலாபுரம் ஊராட்சியில், புதிய நூலக கட்டிடத்தை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, பாலாபுரம் ஊராட்சிமன்ற தலைவர் தென்னரசு தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில், 5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நடைபாதையையும் திறந்து வைத்து, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் பாண்டுரங்கன், ஒன்றியகுழு தலைவர் ரஞ்சிதாஆபாவானன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி சந்தோஷ், ஜமுனா குமாரசாமி, எம்.பி.சந்திரன், கார்த்திகேயன், கல்விகரசி சேகர், கோவிந்தம்மாள் ஆனந்தன், திருநாவுக்கரசு, மற்றும் அதிமுக நிர்வாகிகள், தேசன், சகாதேவன், சின்னதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர், கலைசெல்வி, ஸ்டாலின், மற்றும் அதிமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ராம்கி
நிழல்.இன் – 8939476777