November 28, 2020

பொன்னேரியில், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த, 2,842 பேருக்கு நிதி உதவியை, பலராமன் எம்.எல்.ஏ வழங்கினார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட சோழவரம் ஒன்றியம், மீஞ்சூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 2,842 பேருக்கு ஒரு கோடியே 57 லட்சம் மதிப்பிலான நிதி உதவியினை திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் வழங்கினார்.

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மற்றும் உலக வங்கி நிதியுடன் கோவிட்-19 காரணமாக தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோர்கள் இளைஞர்கள் மாற்று திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் ஆகியோரின் தொழில்கள் மற்றும் வாழ்வாதாரத்தை புத்துயிர் பெறும் நோக்கில் சிறப்பு நிதி உதவி ஒதுக்கீடு செய்யப்பட்டு புலம்பெயர்ந்து திரும்பி திறன் பெற்ற இளைஞர்களுக்கு தொழில் துவங்க ஒரு கோடியே 57 லட்சம் கடன் உதவி அளிக்கப்பட்டது.

இதனை பெற்றுக் கொண்ட தொழில் முனைவோர்கள் மாற்றும் திறன் பெற்ற இளைஞர்கள் தமிழக முதலமைச்சருக்கு சட்டமன்ற உறுப்பினருக்கும் தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா & மில்டன் நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *