November 25, 2020

பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கத் தேர்தலில் கடை உரிமையாளர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும்

1 min read

பொன்னேரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கத்தில் 815 உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கத் தேர்தல் கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெறாத நிலையில், பொன்னேரி நகர வியாபாரிகள் பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் பா. சங்கர் தலைமையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தேர்தல் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொன்னேரி அனைத்துவியாபாரிகள் சங்கத் தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் முதல் தேதி நடத்தப்படும் எனவும் தேர்தலில், கடை உரிமையாளர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனவும், 25 உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் பணிக் குழு உறுப்பினர்கள் தேர்தல் தலைவர் சங்கர் தலைமையில் செயல்படும் என்பது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

செய்திகள் – மில்டன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *