November 25, 2020

பழவேற்காடு முகத்துவாரத்தில், தூண்டில் வளைவு அமைக்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் 35 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உப்பங்கழி ஏரியும், கடலும் சந்திக்கும் முகத்துவாரத்தில் அடிக்கடி மண் அடைப்பு ஏற்ப்பட்டு வந்தது.

அதனால் ஏற்பட்டும் மண்ணரிப்பு காரணமாக முகத்துவாரம் அடைப்பட்டு நீரோட்டம் தடைபட்டுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மீனவர்கள் அவ்வழியாக கடலுக்குச் செல்லும் போது படகுகள் தரை தட்டி சேதம் அடைந்து விடுவதால், அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. ஆகவே, முகத்துவாரத்தை தூர்வாரி தரவேண்டுமென கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முகத்துவாரத்தை தூர்வார அனுமதி வழங்கியுள்ளது. இதனைதொடர்ந்து தமிழக அரசு முகத்துவாரத்தை தூர்வார 27 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்துள்ளது.

இந்நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், இன்று பழவேற்காட்டில் முகத்துவாரத்தை தூர்வாரும் பணிகளை தொடங்குவது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மீனவர்கள் முகத்துவாரத்தை கண்துடைப்புக்காக தற்காலிகமாக தூர்வாரினால் மழைக்காலங்களில் மீண்டும் மணல் அரிப்பு ஏற்பட்டு நீரோட்டம் தடைப்படும் என்றும். எனவே சிமெண்ட் கலவைகள் மூலம் தடுப்புகள் அமைத்து, நிரந்தரத் தூண்டில் வளைவு அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த கூட்டத்தில், பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன், பொன்னேரி ஆர்.டி.ஓ வித்யா, தாசில்தார் மணிகண்டன், மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர். மீனவ கிராம நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

செய்திகள் – மில்டன், முருகன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *