November 25, 2020

அனுப்பம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆயுதபூஜை…

1 min read

மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆயுதபூஜை நிகழ்ச்சி அந்த சங்கத்தின் தலைவர் உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அந்த சங்கத்தின் செயலாளர் வாசு, துணைத்தலைவர் யசோதாரோஸ், இயக்குனர் ராமநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவர் உமாமகேஸ்வரன் பேசுகையில், “சங்கத்தின் செயலாளர், மற்றும் இயக்குனர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும், சங்கத்தின் செயல்பாடுகள், பயன்பாடுகள் குறித்தும், எந்த மாதிரியான கடன்கள் வழங்கபடும் எனவும், இந்த அலுவலத்தில் செயல்படும் ஈ சேவை மையத்தில் பட்டா, சிட்டா, பிறப்பு, இறப்பு சான்றுகள், பெறுவதற்க்கும் மின் கட்டணம், வேலைவாய்ப்பு பதிவு போன்ற வசதிகளும் எளிதில் இப்பகுதி மக்களுக்கு கிடைக்கும்” எனவும் பேசினார்.

தேவதானம் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் பொன்னன் கலந்து கொண்டு, “இந்த சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் சிறப்பாக பணியாற்றி வருவதாக பாராட்டியதுடன், மேலும், சங்க வளர்ச்சிகான வழிமுறைகளையும், இந்த சங்கத்தால் இப்பகுதி மக்கள் பெறகூடிய பலன்கள்” குறித்தும், விளக்கமாக பேசினார். மேலும் இந்நிகழ்ச்சியில், கலந்துகொண்ட சங்கர்ராஜா, பேசுகையில், “இந்த சங்கம் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனவும், இந்த நிகழ்ச்சி இந்த இடத்தில் நடைபெற காரணமான இந்த சங்கத்தின் தலைவர் உமாமகேஸ்வரன் அவர்களை நான் மகிழ்ச்சியுடன் பாரட்டுகிறேன்” எனவும் பேசினார்.

பின்னர், அனுப்பம்பட்டு பகுதியில் 1973ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த சங்கத்தை சில ஆண்டுகளுக்கு முன் இலவம்பேடு பகுதி மற்றும் ஜோதிநகர் பகுதி என இந்த சங்க அலுவலகம் சொந்த கட்டிடம் இல்லாததால், நிலையாக ஒரு இடத்தில் இல்லாமல் அடிக்கடி இடம் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் சென்றாண்டு இந்த அலுவக பணியாளரான குமரேசன் என்பவர் அலுவலத்தில் பணிசெய்து கொண்டிருந்த போது, அங்கு மறைந்து இருந்த விஷபாம்பு ஒன்று கடித்து, உயிருக்கு போராடிய சம்பவமும் நடந்துள்ளது.

மேலும், பழைய கட்டிடத்தில் இச்சங்க அலுவலகம் இயங்கியதால் கோப்புகளும் மழைநீரில் நனைந்தும், கரையான்களால் சேதங்கள் ஆககூடிய நிலை நீடித்ததால், இந்த சங்கத்தின் தலைவர் உமாமகேஸ்வரன் உடனடியாக அதிகாரிகளை அணுகி பல தடைகளுக்கு இடையே, இந்த சங்க அலுவலத்தை பாதுகாப்புடன் செயல்பட, மீண்டும் அனுப்பம்பட்டு ஊராட்சிக்கே கொண்டு வந்ததால், அப்பகுதி மக்கள் அவரை பாராட்டி மகிழ்ந்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில், இயக்குனர்கள், டில்லி, கிருஷ்ணமூர்த்தி, மோகன், தங்கவேலு, பிரசாந்த், சுமித்திரா, அலுவக பணியாளர்கள், குமரேசன், சுமதி ஆகியோரும், ஊராட்சி செயலாளர் செந்தில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேசன், சேகர், டில்லிநாயுடு, ராஜா, பாபு, நீலிரெட்டி, சிவாரெட்டி, முனிநாதன், முன்னாள் வார்டு உறுப்பினர் முருகன், வார்டு உறுப்பினர்கள் ரவி, முனுசாமி, அம்சவல்லி, சமூக ஆர்வலர் சசிபாபு, மணி, செல்வராஜ், தோமோதரன், கார்த்திக், வினோத், ராஜ், சுகானதம், விஜயன், பாஜக நிர்வாகி அரிசிகடை பாலன், ஆனஸ்ட், அய்யப்பன், செல்வம், , ரவிசந்திரன், பரந்தாமன், ஊராட்சி பணியாளர் சகுந்தலா, சந்துரு, உட்பட குடியிருப்போர் சங்கங்களின் நிர்வாகிகள், பலரும் கலந்து கொண்டனர். இறுதியாக, ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *