எண்ணூர் முகத்துவாரம் பகுதியை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்தார்…
1 min read
எண்ணுர் முகத்கதுவாரம் பகுதியில், அடிக்கடி மணல் திட்டுக்கள் உருவாகி அடைப்புகள் ஏற்ப்பட்டு வந்தன. அதனால் வாழ்வாதாரம் இழந்த அப்பகுதி மீனவர்கள் சமீபத்தில் கூட ஆர்பட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, கொசஸ்தலை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள், பக்கிங்காம் கால்வாய், வடசென்னை அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள், உள்ளிட்ட பகுதிகளில், திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா அவர்கள் ஆய்வு செய்தார். அப்போது நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும், அவர் பொதுப்பணி துறையினருக்கு உத்தரவிட்டார். கடந்த 28-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி 29-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது.

கடந்த 2015 ல் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக, எண்ணூர் கழிமுகப் பகுதியில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, திருவள்ளூர் ஆட்சியராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட பொன்னையா, முதல் ஆய்வு பணியாக எண்ணூர் கழிமுகப் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பருவமழை தொடங்கியுள்ள இந்த சூழ்நிலையில் அந்த பணிகளை விரைந்து முடிக்கவும், அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், வடசென்ன
அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் கொண்டு செல்லும் குழாய்களில் ஏற்படும் உடைப்புகளால் பாதிக்கும் பகுதிகள், பக்கிங்காம் கால்வாயில் கொட்டப்படும் சாம்பல் கழிவுகள் உள்ளிட்டவைகளையும், ஆய்வு செய்த ஆட்சியர் பொன்னையா, அவற்றை உடனடியாக அகற்றவும், சுற்றுச்சூழல்களை பாதுகாக்கவும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது சென்னை பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியாளர்(ஓய்வு) காந்திமதிநாதன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777