November 25, 2020

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில், தொ. மு. ச தொழிற்சங்க துவக்க விழா, கும்மிடிப்பூண்டி கி.வேணு தொடங்கி வைத்தார்…

1 min read

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில், உள்ள வினோ மெக்கானிக்ஸ் தொழிற்சாலையில், தொழிலாளர் முன்னேற்ற தொழிற்சங்கத்தின் சார்பில் தொழிற்சங்கத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கும்மிடிப்பூண்டி தொகுதி தலைவருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமை தாங்கி சங்கத்தை திறந்து வைத்தார்.

நிகழ்வில் மேலும், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், மாவட்ட தொ. மு. ச. கவுன்சில் துணை தலைவர் சிவக்குமார் , மாவட்ட தொ. மு. ச. துணைத் செயலாளர் தினகரன், மாவட்ட கவுன்சிலர் சாரதா முத்துசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன், அமலா சரவணன், மாவட்ட பிரதிநிதி இஸ்மாயில், முன்னாள்கவுன்சிலர் வெங்கடேசன், ராகவரெட்டிமேடு ரமேஷ், ஒன்றிய பிரதிநிதி சி. கருணாகரன், அக்கீம், அயுப்கான், சாண்டில்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கும்மிடிப்பூண்டி தொகுதி
தொழிலாளர் முன்னேற்ற சங்க பொது செயலாளரும், சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் மு.மணிபாலன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக, தொழிலாளர் முன்னேற்ற சங்க அகில இந்திய இணை செயலாளர் பேச்சிமுத்து பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை வினோ மெக்கானிக் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் எஸ்.வேலு, துணை தலைவர் மகேஷ் குமார் , பொருளாளர் கே.ஏ.ஆனந்தன், சங்க நிர்வாகிகள் எம்.தினேஷ்குமார், முரளி பாஸ்கர் உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர். விழா முடிவில் துணை தலைவர் எஸ். இராஜசேகர் நன்றி தெரிவித்தார்.

செய்திகள் – சுடர்மதி
நுழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *