November 25, 2020

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே, கண்காணிப்பு கேமராக்கள், உயர்கோபுர மின் விளக்குகள் திறப்பு விழா…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட வன்னிப்பாக்கம், சிறுவாக்கம், கொடூர் ஆகிய ஊராட்சிகளில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 46 கண்காணிப்பு கேமராக்கள், மற்றும் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

மேலும், 10 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் காவல் உதவி மையம் திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

பொன்னேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்தும் மீஞ்சூர் ஒன்றிய கவுன்சிலர் பானுபிரசாத் நிதியிலிருந்தும் அமைக்கப்பட்ட இவைகளை திறந்து வைத்து பேசிய எஸ் பி அரவிந்தன், திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து அரசியல் மற்றும் அலுவலர்களும் துணை நிற்கிறார்கள் என்றும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். என்றும், பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மோகனவடிவேல், பொன்னுதுரை, ஆர்.எம்.ஆர். ஜானகிராமன், ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணபிரியா வினோத், சிறுவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சேகர், வன்னிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா, கோட்டைக்குப்பம் சம்பத், வழக்கறிஞர் மீஞ்சூர் மாரி, எம்.வி.தமிழரசன், பொன்னேரி செல்வகுமார், பா.சங்கர், கடப்பாக்கம் ராஜா, பரிக்குப்பட்டு செந்தில், கோட்டைக்குப்பம் சந்திரசேகர், கோளூர் கோதண்டன், கந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *