புழல் ஏரியில், நடைபயிற்சி செல்வோருக்கு உடல் ஆரோக்கியம் காக்கும் பானம் வழங்கப்பட்டது…
1 min read
பவானிநகர் சுற்றுவட்டார சமூக நல பாதுகாப்புக் குழு, ரெட்ஹில்ஸ் நண்பன் இதழ் இணைந்து இஞ்சி, எலுமிச்சை, கல் உப்பு, மிளகு, புதினா, வெற்றிலை உள்ளிட்டவைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட உடல் ஆரோக்கியத்திற்கான ஜூஸ், செங்குன்றம் – புழல் ஏரியில் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கும், சமூக பணிக்குழு அறக்கட்டளை சார்பில், புழல் ஏரி தூய்மை பணி செய்வோருக்கும் வழங்கும் நிகழ்ச்சி புழல் ஏரி கரையில் பவானிநகர் சுற்றுவட்டார சமூக நல பாதுகாப்புக் குழு கௌரவ ஆலோசகர் என்.வி. வெங்கடேசன் தலைமையிலும், சங்க துணைச் செயலாளரும், ரெட்ஹில்ஸ் நண்பன் இதழின் ஆசிரியருமான நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் வரவேற்புரையாற்ற இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுப்பணித்துறை உயவி பொறியாளர் சதீஷ், செங்குன்றம் – புழல் ஏரி நடைபயில்வோர் சங்கத்தின் தலைவர் இரா.ஏ.பாபு, செயலாளர் டி.பவானிசங்கர், பொருளாளர் இஎஸ்கே. குமார், கௌரவ ஆலோசகர் ஜி.ராஜேந்திரன், துணைத்தலைவர் கிராண்ட்லைன் சி.ஏழுமலை, குணாளன், வித்யபாரதி, துணைச் செயலாளர் கரிகாலன் நகர் செல்வம், ஜெ.எஸ். கண்ணன், ஆர்.சுரேஷ், சட்ட ஆலோசர் வழக்கறிஞர் இ.அன்பரசு, சிற்றம்பலம், ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.செல்வக்குமார், திருமலை, செயற்குழு உறுப்பினர் பி.செல்வம், கன்னியப்பன்ய ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில், செங்குன்றம் நெல் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஏ.லோகநாதன், சமூக பணிக்குழு அறக்கட்டளை செயலாளர் சமீர், ஆல்ஃபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயக்குநர் ஜெரால்டு பின்னி, முதல்வர் ஜெனிபர், துணை முதல்வர் சுதாகர், குட்வேர்ட் பப்ளிக் பள்ளியின் தாளாளர் ஐ. ஜலாலுத்தீன், பாடியநல்லூர் லயன்ஸ் கிளப் செயலாளர் கா.ஷண்முக சுந்தரம், தீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 200க்கும் மேற்பட்டோருக்கு ஜூஸ் வழங்கப்பட்டது.

செய்தியாளர் – ரெட்ஹில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777