வில்லிவாக்கம் ஒன்றிய மக்கள் நீதி மையம் சார்பாக, கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, கால்பந்தாட்ட போட்டி…
1 min read
மக்கள் நீதி மய்யத்தின் மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியத்தின் சார்பாக, நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, 40 வயதிற்கு மேற்பட்ட சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஒரு நாள் கால்பந்தாட்ட போட்டி செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஈஸ்வரன் நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் வட மற்றும் மத்திய மாவட்டச் செயலாளர் எஸ்.டி. மோகன் தலைமை தாங்கினார்.
வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளர் எம்.ஆனந்தகுமார், திருவள்ளூர் வட, மத்திய மாவட்ட செய்தி மற்றும் ஊடகப் பிரிவு செயலாளர் பி.பிரவீன்குமார், பம்மதுகுளம் ஊராட்சி செயலாளர் பி.அருணாச்சலம், வில்லிவாக்கம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் வி.மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புழல் ஒன்றியச் செயலாளர் கே.சிவஞானம், சோழவரம் ஒன்றிய செயலாளர் எஸ்.குமரேசன், மாதவரம் நகரச் செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். மக்கள் நீதி மய்யத்தின் மாநில பொதுச் செயலாளரும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான ஏ.ஜி. மௌரியா, சென்னை – திருவள்ளூர் மண்டலச் செயலாளர் என்.கமீலா நாசர், இளைஞரணி மாநிலச் செயலாளர் எஸ்.சினேகன், மாநில செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தனர்.

வில்லிவாக்கம் ஒன்றிய துணைச் செயலாளர் சி.பிரகாஷ், தொழிலாளர் அணி செயலாளர் எம்.பிரபு, பம்மதுகுளம் எம்.இளங்கோவன், பம்மதுகுளம் ஊராட்சி இளைஞர் அணி செயலாளர் எஸ்.சதாசிவம், வில்லிவாக்கம் ஒன்றிய மாணவரணி செயலாளர் ஆர்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர். இப் போட்டியில் 15க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு போட்டியை கண்டுகளித்தனர்.
செய்தியாளர் – ரெட்ஹில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777