செங்குன்றம் பாடியநல்லூர், யாதவர் நலச் சங்கத்தில் நினைவேந்தல், படத்திறப்பு விழா…
1 min read
இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவரும், தமிழ்நாடு யாதவ மகா சபையின் தலைவருமான டாக்டர் எம்.கோபாலகிருஷ்ணன் யாதவ் மற்றும் பாடியநல்லூர் சுற்றுவட்டார யாதவ நலச்சங்கத்தின் முன்னாள் தலைவரும் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான டி.சி. முனியாண்டி யாதவ் ஆகியோர்களின் நினைவேந்தல், படத்திறப்பு விழா, நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த மலரஞ்சலி நிகழ்ச்சியை பாடியநல்லூர் சுற்றுவட்டார யாதவர் நலச் சங்கம், ஸ்ரீநவநீத கிருஷ்ணர் எண்டர்பிரைசஸ் இணைந்து பாடியநல்லூர் விஎம்ஜி செலிப்பேரஷன் பேலஸில் நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு, பாடியநல்லூர் சுற்றுவட்டார யாதவர் நலச் சங்கத்தின் தலைவர் பி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் எம்.வி. புண்யசேகரன் அனைவரையும் வரவேற்றார். சங்கத்தின் பொருளாளர் எம்.முத்து, சங்க காப்பாளர்கள் கே.ஏ. மலைமேகம், ஞானப்பிரகாசம், கருப்பையா, நாகலிங்கம், ஓ.கே. முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி, தமிழ்நாடு யாதவ மகா சபையின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் பொன்னேரி கோகுல சேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இதில் யாதவ இளைஞரணி சங்கத்தின் தலைவர் சரவணன், செயலாளர் ஹரி, பொருளாளர் ஆதி வெங்கடேசன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும், டி.சி. முனியாண்டி குடும்பத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இருவரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு, திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

செய்தியாளர் – ரெட்ஹில்ஸ் நண்பன், நிழல்.இன் – 8939476777