November 25, 2020

ஆர்.கே.பேட்டை, அம்மனேரி ஊராட்சியில், 37 லட்சத்தில் புதிய சாலை அமைக்க, நரசிம்மன் எம்.எல்.ஏ பூமி பூஜை…

1 min read

திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை, அம்மனேரி ஊராட்சியில் 37 லட்சத்தில் புதிய சாலை அமைக்க வேண்டி, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை பணியை, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு ஊரக உள்கட்டமைப்பு சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம், அம்மனேரி பகுதியில் சாலை அமைக்க 37 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்பணியை, பூமி பூஜை செய்து, திருத்தணி எம்.எல்.ஏ நரசிம்மன் அவர்கள் துவக்கி வைத்தார். அப்போது அவருடன், ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் வேளாஞ்சேரி சந்திரன், மாவட்ட கவுன்சிலர் பாண்டுரங்கன், ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா அன்புவானன், முன்னாள் கவுன்சிலர் மணி, ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி சந்தோஸ், கல்விக்கரசி சேகர், திருநாவுக்கரசு, மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்கள், அதிமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ராம்கி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *