ஊத்துகோட்டை பகுதியில், நிறுத்தபட்ட பேருந்தை மீண்டும் இயக்க ஊராட்சிமன்ற தலைவர்கள் கோரிக்கை…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு ஊத்துகோட்டை பனிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கபட்டு வருகிறது. அதில், ஒரு பேருந்து ஊத்துகோட்டை முதல் பெரியபாளையம் வரை மாம்பாக்கம் வழி தடத்தில் இயங்கி வந்த 92B பேருந்து கடந்த 6 மாதங்களாக இயக்கப்படவில்லை அதனால், அந்த தடத்தில் இயங்கும் பேருந்து செல்லும் வழியில் உள்ள கிராம மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

அதனால் அந்த பேருந்து இயங்கத்தை எதிபார்த்து இருக்க கூடிய ஐந்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஊத்துகோட்டை பனிமனையின் கிளை மேலாளரிடம் மனு அளித்தனர். அதில், கடந்த 6மாத காலமாக இயங்காத ஊத்துகோட்டை – பெரியபாளையம் வழிதட பேருந்தினை முன்பு போல் தொடர்ந்து, போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், வேளகாபுரம்,
மாமண்டூர் ஆகிய வழித்தடங்களில்
இயக்க வேண்டும், என்று வேண்டுகோள் வைக்கபட்டு இருந்தது.

இந்நிகழ்வில், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் D.ஜெயராமன், போந்தவாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் பா.சித்ராபாபு,
வேளாகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஹரி, பேரிடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்
R.தில்லைகுமார், மாமண்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீராம் ஆகியோர் சென்று இருந்தனர். மேலும் அவர்களுடன், துணைத் தலைவர்கள் முனுசாமி, வைஷ்ணவிகுமார்,
வார்டு உறுப்பினர்கள் சுஜாதாநாகராஜ்,
ராஜேஷ் மற்றும் ஊராட்சி செயலர்கள் தனசேகரன், அரிதாஸ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – மகேஷ்
நுழல்.இன் – 8939476777