November 25, 2020

மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, அதானி குழுமத்தின் சார்பில் கோவிட்-19 அறைக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இயங்கிவரும் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காட்டுப்பள்ளி அதானி துறைமுக அறக்கட்டளை சார்பில் கோவிட்19 அறைக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கோவிட்-19 வைரஸ் தொற்று குறித்த ஆவணங்களை பதிவு செய்வதற்கு இரண்டு கம்ப்யூட்டர்களும், நகல்கள் எடுப்பதற்கு பிரிண்டர், பயனாளிகள் அமர்வதற்கு 10 சொகுசு இருக்கைகள்,140 லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்டவைகள் இந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. இந்த நலத் திட்டங்கள் மூலம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட
அத்திப்பட்டு, காட்டூர், தேவம்பட்டு, மெதூர் ஆரம்ப சுகாதார நிலையங்களின் எல்லைக்குட்பட்ட 370 கிராம மக்களும் பொன்னேரி மீஞ்சூர் பேரூராட்சி மக்களும் பயனடைவர்.

இதற்கான துவக்க விழா திருவள்ளூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் கே.ஆர்.ஜவஹர்லால் உத்தரவின் படி, மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அதானி அறக்கட்டளை துணைப் பொது மேலாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு,கோவிட்-19 அறைக்கான உபகரணங்களை பயன்பாட்டுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷிடம் வழங்கினார். அதானி துறைமுக அறக்கட்டளை இயக்குனர் வசந்த் கட்வி,டாக்டர் அனில் பாலகிருஷ்ணன் மற்றும் அதானி காட்டுப்பள்ளி துறைமுக உயர் அதிகாரிகள் ஹரிஷ் சவிதா,ரமேஷ் செட்டி, சதிஷ் குமார்
ஆகியோர் காணொலி காட்சி மூலமும் கலந்து கொண்டனர். மீஞ்சூர் வட்டாரம் மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் நிஜந்தன், மருத்துவர்கள் ரம்யா, யாமினி, தஸ்ஸீன் பானு, சண்முகப்பிரியா, இளவரசி
முதுநிலை திட்ட அலுவலர் சபாபதி, திட்ட அலுவலர்கள் தீன்சா, ஹேமந்த் குமார், மஞ்சு, மீஞ்சூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *