திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில், விடுதலை சிறுத்தை கட்சியினர் மனுநூலை விளக்கும் கருத்து பரப்புரை…
1 min read
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மகளிர் எழுச்சி மக்கள் மீட்சி எனப்படும் மனுநூலை விளக்கும் கருத்து பரப்புரை இயக்கத்தில் ஈடுபட்டனர். திருமாவளவன் பெண்களை இழிவு செய்ததாக பாரதிய ஜனதா கட்சியினர் அவதூறு பரப்புவது குறித்தும், மனுஸ்மிருதியை தடை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகமெங்கும் கிராமங்கள் தோறும் கருத்துப் பரப்புரை இயக்கத்தினை நடத்தி வருகின்றனர். அதன்படி, மீஞ்சூர் பஜார் வீதியில் பரப்புரை இயக்கத்தை நடத்தும் விதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வழக்கறிஞர் நெடுஞ்செழியன் தலைமையில் வீதி, வீதியாக சென்று துண்டு பிரசுரங்களை வினியோகித்து பரப்புரையில் ஈடுபட்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777