November 28, 2020

சென்னை, ரெட்டைஏரி சந்திப்பில், வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி, பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்…

1 min read

திருத்தணியில், இன்று வேல் யாத்திரைக்காக பாஜக மாநில தலைவர் வேல்முருகன் திருத்தணிக்கு சென்றார். வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி, சென்னை ரெட்டேரி சந்திப்பில் பாஜகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும், என கோஷங்களை எழுப்பியவாறு, சாலை சந்திப்பில் 4 புறங்களிலும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டம், சென்னை மேற்கு மாவட்டம் பாஜக சார்பில், வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி, மாவட்ட தலைவர் சென்னை சிவா தலைமையில், மாவட்ட பொது செயலாளர் சசிதரன், தியாகராஜன், மதியழகன், சேஷாத்ரி, பிரகாஷ், சரவணன், உட்பட திரளாக பாஜக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பாஜகவினர் தொடர்ந்து இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரமாக பெரம்பூர், கோயம்பேடு, செங்குன்றம், மாதவரம் செல்லும் ஆகிய 4 வழிகளிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இறுதியாக காவல்துறையினர் அவர்களை கைது செய்து விநாயகபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த போராட்டத்தால் ரெட்டேரி பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *