மீஞ்சூர் ஒன்றியம், காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதானி துறைமுக அறக்கட்டளை சார்பில், நலதிட்ட உதவிகள் வழங்கபட்டது…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, மருத்துவ பணிகள் உதவிக்காக குளிர்சாதன பெட்டி மற்றும் சொகுசு இருக்கைகள் அதானி துறைமுக அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர். மது அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன், ஒன்றிய கவுன்சிலர் நந்தினி நீலவண்ணன், அதானி துறைமுக பாதுகாப்பு துறை தலைவர் முத்தமிழ்ச் செல்வன், சஞ்சய் மற்றும் சமுதாய நல திட்டப்பணிகள் குழுவினர் இதில் பங்கேற்றனர். மேலும், காட்டூர் ஊராட்சி மன்றத்தில் அடங்கிய கிராமப்புற பெண்களுக்காக தொடங்கப்பட்ட தொழிற்பயிற்சி மையத்தில் தொழில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் பெண்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டன.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777