பொன்னேரி தீயணைப்பு துறையினர் தீபாவளி முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்…
1 min read
வரும் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையிலான தீயணைப்பு துறையினர் பொன்னேரி, சின்னகாவனம் உள்ளிட்ட, பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் பொது மக்களிடம் தீபாவளி குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது குறித்தும், பாதுகாப்பாக இருக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்படாமல் கவனமாக கையாள வேண்டும் என்றும் அவசர அழைப்பிற்கு 101 மற்றும் 108 என்ற எண்ணை அழைக்க வேண்டுமென்றும் 044-27974064 எண்ணிலும், 9445086164 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தகவல் அளிக்கவும் தீயணைப்புத்துறையினர் கேட்டுக்கொண்டனர்

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777