வில்லிவாக்கம் ஒன்றியம், அயப்பாக்கம் ஊராட்சியில், 3.43 கோடி வளர்ச்சி பணிகள் துவக்க விழா…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சி, அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம், ரூ. 3.43 கோடி மதிப்பீட்டில், வளர்ச்சி பணிகள் செய்து முடிக்கப்பட்டது.

முடிவுற்ற அந்த 12 திட்டப்பணிகளை மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பொன்னையா அவர்கள் திறந்து வைத்தனர். உடன் திட்ட இயக்குனர் லோகநாயகி அவர்கள் வில்லிவாக்கம் ஒன்றிய பெருந்தலைவர் கிரிஜா, அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி, ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதி, மாவட்ட கவுன்சிலர் சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

செய்திகள் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777