பாஜக தற்போது செய்து வரும் செயலுக்கு நாங்கள் ஆதரவோ, எதிர்ப்போ கிடையாது, மாஃபா பாண்டியராஜன் பேட்டி…
1 min read
மூலக்கடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாலகிருஷ்ணன் பவுண்டேஷன் சார்பில், ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மத்திய உணவுடன், 250 நபர்களுக்கு 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை, உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதில், சிறப்பு விருந்தினராக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மா.பா. பாண்டயராஜன் அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டியது பாஜகவின் கடமை அவர்கள் தற்போது செய்து வரும் செயல் மக்களிடம் ஆதரவாக போய் சேருகிறதா என்பதை அவர்கள் பார்க்க வேண்டும். அவர்களின் அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவும் கிடையாது, எதிர்ப்பும் கிடையாது. கொரோனா காலத்தில் நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைத்தான் எடுத்து வருகிறோம்.

பாஜக தற்போது மேற்கொண்டு வரும் செயல் மக்கள் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயல் என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிடக்கூடாது. 100 பேருக்கு மேல் ஒன்று கூடினால், கைது செய்ய வேண்டும் என்பது தற்போது கொரோனா காலத்தில் உள்ள ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதைத்தான் தற்போது நாங்கள் செய்து வருகிறோம். பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது அதற்கு ஏற்ற வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், அதிமுகவின் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர் கண்ணன் T.G. வெங்கடேஷ் பாபு வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளர் கொளத்தூர் K.கணேஷ் V. லில்லி கல்பனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமை சங்கமான தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவன தலைவர் R. சுகுமார் பாலகிருஷ்ணன்,
துணைத்தலைவர் மாதேஸ்வரன்,
மற்றும் மாநில செயலாளர் ராஜேந்திரன் செயலாளர் சுரேந்திரன், செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் துரைராஜ், செயற்குழு உறுப்பினர் செந்தில் அருள், ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தனர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ரஞ்சித்
நிழல்.இன் – 8939476777